சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (British Standards Institution) பிரிட்டிஷ் தரநிலை நிறுவனம் வழங்கியுள்ள ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றினை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபுவிடம் வழங்கினார்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112, 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீன ஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு British Standards Institution-னால் ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இச்சான்று இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு நாளை முதல் 4 நாள்கள் விடுமுறை... மாணவர்கள் மகிழ்ச்சி...