ETV Bharat / city

'கலப்பு திருமணத்திற்கு ரூ. 60 ஆயிரம் நிதியதிதவி' திமுகவின் அறிக்கை மீது அவதூறு

திமுக மீது அவதூறு பரப்பி, பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட காணொலியை நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'கலப்பு திருமணத்திற்கு  ரூ. 60 ஆயிரம் நிதியதிதவி'   திமுகவின் அறிக்கை மீது அவதூறு
'கலப்பு திருமணத்திற்கு ரூ. 60 ஆயிரம் நிதியதிதவி' திமுகவின் அறிக்கை மீது அவதூறு
author img

By

Published : Mar 26, 2021, 7:51 AM IST

இது தொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்ணாவினால் 1967ஆம் ஆண்டில் தொடங்கப்ட்ட ’கலப்புத் திருமணங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்’ பல்வேறு காலங்களில் அனைத்து அரசுகளாலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு எட்டு கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும் என்றும் திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்பதை அறிந்த மாற்று அணியினர் பல்வேறு பொய்ப் பரப்பரைகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒரு பெண்மணி, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சில குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை கலப்புத் திருமணம் செய்தால் நிதியுதவி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளதாகக் கூறி பொய் பரப்புரை செய்து வந்தார். அந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் பரப்பியும் வந்தனர்.

காணொலியில், பல்வேறு சமூகங்களிடையே வன்மத்தை தூண்டும் விதமாகவும் பேசப்பட்டிருக்கிறது. எனவே இக்காணொலியை தடை செய்ய வேண்டும். மேலும், அதற்குக் காரணமானவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. எம்.பி., மாநிலத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

இதனை ஆராய்ந்த மாநிலத் தேர்தல் அலுவலர், காணொலிக்கான காரணமானவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153Aஇன் கீழ் வழக்குப் பதிவு செய்திட தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மாநிலத் தேர்தல் அலுவலர் மற்றொரு கடிதத்தின் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பு செயலாளருக்கு (Under Secretary) காணொலியை அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் நீக்கிட பரிந்துரை செய்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.