சென்னை: நீலாங்கரை கடற்கரையில் மக்கள் குழு ஒன்று கூடி, பாராஸ் மற்றும் மே என பெயரிடப்பட்ட இரண்டு ஆலிவ் ரிட்லி ஆமைகளை இன்று (மார்ச் 19) பாதுகாப்பாக கடலில் விடுவித்தனர். இரண்டு ஆமைகளும் சென்னையில் உள்ள மரம் அறக்கட்டளை (Tree Foundation) மூலம் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இளம் வயது ஆலிவ் ரிட்லி, பாராஸ், மே மார்ச் 2020-இல் வெட்டுவான்கேணி கடற்கரையோரம் நீரற்ற நிலையில், முன்பக்க நீந்துவதற்கு பயன்படும் உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சிக்கிக் கொண்டது.
இரண்டு ஆமைகளும் மரம் அறக்கட்டளையின் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு மருத்துவ பராமரிப்பும், ஊட்டச்சத்து உதவியும் வழங்கப்பட்டு நன்றாக குணமடைந்துள்ளன என அறக்கட்டளையில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அவை மீட்கப்பட்ட பிறகு, மரம் அறக்கட்டளை வளாகத்தில், ஆமைகள் தினமும் கைமுறையாக சுத்தம் செய்யப்பட்ட கடல் நீர் மறுவாழ்வு தொட்டிகளில் வைக்கப்பட்டன. அவர்களின் உணவில் மீன், கணவாய், இறால் மற்றும் நண்டு ஆகியவை அடங்கும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) ஆமைகளுக்கு எக்ஸ்-ரே மற்றும் பிற வசதிகளைப் பயன்படுத்தி மருத்துவ உதவி வழங்கப்பட்டதை அடுத்து அவற்றை கடலில் விடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஆமைகள் இன்று காலை விடுவிக்கப்படுவதற்கு முன்பு தங்கள் தொட்டிகளில் அவற்றைப் பார்க்க மக்கள் கூடினர். மேலும் காலை 10.30 மணியளவில் நீலாங்கரை கடற்கரைக்கு ஆமைகள் கொண்டு செல்லப்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் மரம் அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஆமைகளை தூக்கி சென்று மீனவர்களின் படகுகளில் வைத்தனர். பிறகு, மீனவர்கள் 3 கி.மீ கடலுக்குள் அழைத்துச் சென்று விடுவித்தனர்.
இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட் 2022- மீன்வள மேம்பாட்டு திட்டங்கள்!