ETV Bharat / city

அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை - பிடிஆர் பதில்! - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து

அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Jun 1, 2022, 10:32 PM IST

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் PFRDA-வில் டெபாசிட் செய்ய வேண்டிய 10 ஆயிரத்து 436 கோடி ரூபாயை தமிழக அரசு டெபாசிட் செய்யவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. உண்மைக்கு புறம்பானவை. தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். இத்திட்டத்தில் 6 கோடியே 2 ஆயிரத்து 377 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு நிகரான தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது.

இத்தொகை 2003ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS)சேர்வதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் 53 கோடியே 555 லட்சம் ரூபாயாக உள்ளது. இத்தொகையில் 41 கோடியே 264 லட்சம் ரூபாய், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், 12 ஆயிரம் கோடி ரூபாய் பாரத ரிசர்வ் வங்கியின் மூலமும் மத்திய அரசின் கருவூல பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் இந்த முறைதான் செயல்பாட்டில் உள்ளது. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதைத்தான் பின்பற்றினார்கள்.

இத்தொகையை தமிழ்நாடு அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எதையும் மறைக்காமல், ஒளிவு மறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கெனவே கொள்கை விளக்கக் குறிப்பின் மூலம் மாநில சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வைக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்க, இதுபோன்ற பொய் செய்திகளை பரப்பி, அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 139 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.