ஜேப்பியார் கல்வி நிறுவனம் அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்தை மறைத்து கணக்கு காட்டாமல் இருந்ததாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, சென்னையில் சூளைமேடு, பெருங்குடி, பூந்தமல்லி, அண்ணா நகர் உள்ளிட்ட 30 இடங்களில் செயல்பட்டு வரும் ஜேப்பியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் சோதனை முடிவில் வெளியாகும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கல்கி பகவான் ஆசிரமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், தங்க வைர நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், ஜேப்பியார் நிறுவனத்தில் நடைபெற்று வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.