ETV Bharat / city

பாஜக கூட்டணி பற்றி தெரியாது; அதிமுக தனித்து செயல்படுகிறது - தம்பிதுரை - Election

சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. அதிமுக இதுவரை தனித்துதான் செயல்படுகிறது. யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

thambi
author img

By

Published : Feb 8, 2019, 12:07 AM IST

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும், பன்னீர்செல்வம் கட்சியையும் சிறப்பாக நடந்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. அதிமுகவில், கூட்டணி தொகுதிப் பங்கீடு செய்ய, தேர்தல் அறிக்கை தயார் செய்ய, பிரச்சாரம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை பணிகளை செய்து கொண்டிருக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது

கட்சியில் தேர்தல் பொறுப்பு ஏற்றுள்ளவர்கள் அனைவரும், எது நல்லது என்று தேர்ந்தெடுத்து அதற்கேற்ப செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமைக்கழகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ அந்த வழியிலேயே நாங்கள் செயல்படுகிறோம். இன்றைய சூழ்நிலை பற்றி கட்சியை வழிநடத்துபவர்களுக்கு நன்றாக தெரியும். எப்படி செயல்பட்டால் நன்று என்பதை அறிந்து செயல்படுவார்கள். கூட்டணி தேவையா இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கட்சிக்கும் நாட்டுக்கும் என்ன நல்லது என்பது எங்களை வழி நடத்துபவர்களுக்கு தெரியும். அதிமுக இதுவரை தனித்துதான் செயல்படுகிறது கூட்டணி தேவையா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

ஜெயலலிதா தற்போது இல்லை என்றாலும், அவர் இருப்பதாக நினைத்துதான் செயல்படுகிறோம். இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுகவை யாரும் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது

undefined

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காகதான். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்துக்கு தரவேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டபோது வழங்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து தமிழகத்துக்கு வர வேண்டிய தொகையை கேட்டபோது அதுவும் வரவில்லை

கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட தொகையும் வரவில்லை. காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த பாதகங்களை வெளிப்படுத்தி வருகிறேன்

ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி பேசுகிறார். அதனை 2012-ம் ஆண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுதான் கொண்டு வந்தது. தமிழகத்தை பாதிக்கின்ற எந்த ஒரு நிலையை மத்திய அரசு எடுத்தாலும் அதிமுக எதிர்க்கும். தமிழகத்துக்கு யார் நல்லது செய்கிறார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தருவதில் என்ன தவறு இருக்கிறது. யாருக்கு சீட் தருகிறார்கள் என்பதை பின்னால் பார்ப்போம். அரசியல் தலைவர்களின் வாரிசுகள் வருவதில் தவறு இல்லை. அவர்களுக்கு பதவிகள் வரும்போதுதான் நிறைபாடா குறைபாடா என்பதை சொல்ல முடியும்

குடும்ப அரசியல் என்பது தொடர்ந்து கட்சியிலும், ஆட்சியிலும் ஒரே குடும்பம் இருப்பதுதான். திமுகவில் அப்படித்தான் உள்ளது. அதிமுகவில் யாரும் அப்படி இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் வந்துள்ளனர்

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருக்கும் அனைத்தையும் முன்பே சொல்லி இருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டு விட்டு இப்போது சொல்கிறார்கள்.

undefined

இவ்வாறு அவர் கூறினார்.

Intro:மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

Body:மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியும் பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது அதிமுகவில் கூட்டணி தொகுதிப் பங்கீடு செய்யவும் தேர்தல் அறிக்கையும் பிரச்சாரம் செய்யவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது அந்த குழுக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கின்றன மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது

கட்சியில் தேர்தல் பொறுப்பு ஏற்று உள்ளவர்கள் அனைவரும் எது நல்லது என்று தேர்ந்தெடுத்து அதற்கேற்ப செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

யார் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமைக்கழகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை

ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ அந்த வழியிலேயே நாங்கள் செயல்படுகிறோம் இன்றைய சூழ்நிலை பற்றி கட்சியை வழிநடத்தும் அவர்களுக்கு நன்றாக தெரியும் எப்படி செயல்பட்டால் நன்றி என்று என்பதை அறிந்து செயல்படுவார்கள் கூட்டணி தேவையா இல்லையா அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் என்று சொல்லி இருக்கிறார் அந்த வகையில் அதிமுக வலிமையான கட்சியாகும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் கட்சிப் பொறுப்பாளர்கள் நல்ல ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

கட்சிக்கும் நாட்டிற்கும் என்ன நல்லது என்பது எங்களை வழி நடத்துபவர்களுக்கு தெரியும் ஜெயலலிதா வழியில் செயல்படுவார்கள் அதற்கு ஏற்ற நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

ஜெயலலிதா இல்லை என்றால் அவர் இருப்பதாக நினைத்து தான் செயல்படுகிறோம் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை யாரும் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது

அதிமுக இதுவரை தனித்துதான் செயல்படுகிறது கூட்டணி தேவையா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்

மத்திய அரசிடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கு தரவேண்டிய ரூபாய் 15 ஆயிரம் கோடியை கேட்டபோது வழங்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு வர வேண்டிய தொகையை கேட்டபோது அதுவும் வரவில்லை கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட தொகையும் வரவில்லை காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த பாதகங்களை தான் வெளிப்படுத்தி வருகிறேன்

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காக தான் ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி பேசுகிறார் நீட் தேர்வை யார் கொண்டுவந்தது 2012ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்தது தமிழகத்தை பாதிக்கின்ற எந்த ஒரு நிலையை மத்திய அரசு எடுத்தாலும் அதிமுக எதிர்க்கும் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்

அதிமுக வில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தருவதில் என்ன தவறு இருக்கிறது யாருக்கு சீட் தருகிறார்கள் என்பதை பின்னால் பார்ப்போம் அரசியல் தலைவர்களின் வாரிசுக்கள் வருவதில் தவறு இல்லை பதவிகள் வரும்போதுதான் நிறைபாடா குறைபாடா என்பதை சொல்ல முடியும்

குடும்ப அரசியல் என்பது தொடர்ந்து கட்சியிலும் அட்சியிலும் ஒரே குடும்பம் இருப்பதுதான் திமுகவில் அப்படித்தான் உள்ளது அதிமுக வில் யாரும் இல்லை எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா தொடர்ந்து ஒ.ப்.எஸ்,இ.பி.எஸ் வந்து உள்ளனர்

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதை அனைத்தையும் முன்பே சொல்லி இருக்க வேண்டும் அப்போது கோட்டை விட்டு விட்டு இப்போது சொல்கிறார்கள்

Conclusion:மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இவ்வாறு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.