ETV Bharat / city

'அதிமுகவில் சாமானிய தொண்டனும் உச்சநிலைக்கு வரலாம் என்பதற்கு நானே சாட்சி' - ஆர்.பி.உதயகுமார் - RB Udayakumar replied to Ops letter to Speaker

'ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு சட்டப்படி எது சாத்தியமோ அதை பார்த்துக்கொள்ளலாம்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உதயகுமார்
உதயகுமார்
author img

By

Published : Jul 19, 2022, 8:14 PM IST

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை வழங்கியதற்கு இடைக்கால பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.

சாமானியனுக்கும் பதவி வழங்குவது அதிமுகவில் மட்டும் தான் நிகழும். கடந்த ஒரு ஆண்டாக சட்டப்பேரவையில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி சரியான முறையில் எதிர்த்து வருகிறார். இனிவரும் காலங்களிலும் திமுக அரசு செய்துவரும் குளறுபடிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வரலாற்று வாய்ப்பை தந்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவில் சாமானிய தொண்டனும் உச்ச நிலையை அடைந்திருக்கிறான், அதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன். ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்திற்கு சட்டப்படி எது சாத்தியமோ அதை பார்த்துக்கொள்ளலாம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'திரையுலகத்தின் கதாநாயகன் சட்டப்பேரவையில் இருக்கின்றார்'; கடம்பூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.