சென்னை: தாம்பரம் பகுதியில் வசித்துவரும் மார்டின்(38),ரோசி எலிசபெத்(34) தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணம் நடந்து 15 ஆண்டுகளாகியும் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் மார்டினின் தாய் ரோசியிடம் பணம் கேட்டு வரதட்சணை கொடுமை பல ஆண்டுகளாக செய்துவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரோசி எலிசபெத்தின் தந்தைக்கு சர்க்கரை நோயால் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் தன் அப்பாவை பார்க்க வேண்டும் எனப் பலமுறை தன் கணவர், மாமியாரிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கணவனிடம் கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் உள்ள தன் வீட்டுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு ரோசி எலிசபத் சென்றுள்ளார். இரண்டு மாதம் காலமாகியும் மனைவி தன் வீட்டிற்க்கு வரததால் மார்டின் பழைய பெருங்களத்தூரில் உள்ள மாமானர் வீட்டிற்கு சென்று மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பலமுறை அழைத்தும் வராத ஆத்திரத்தில் நேற்று மீண்டும் இரவு மது குடித்துவிட்டு போதையில் தன் மனைவியை தாம்பரத்தில் உள்ள தன் வீட்டிற்கு வரும்படி அழைத்த போது வரதாத காரணத்தால் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்து இருந்த கார்பெண்டர் பயன்படுத்தும் கூர்மையான உளியை கொண்டு மனைவியின் முதுகு, கழுத்து, தலைப்பகுதியில் குத்தியுள்ளார்.
மேலும் தன் வீட்டிற்கு அனுப்பாத மாமியாரையும் கையில் குத்தியதால் வலி தாங்க முடியாமல் இருவரும் கதறி அழுததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதித்தனர்.
இது குறித்து மனைவியின் தாயார் பீர்க்கண்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், மார்டினை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மதுபோதையில் மனைவியை உளியால்குத்திய கணவன் - Chennai district news
இரண்டு மாதங்களாக மனைவி அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு வராததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவி, மாமியாரை உளியால் குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.