தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பல்வேறு திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்லாமல், அனைத்து பிரிவு மக்களுக்கும் தரமான, குறைந்த விலையில் குடியிருப்பு கட்டடங்கள் அமைத்து திட்டமிட்ட மற்றும் ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் இணக்கமான வளர்ச்சியை கருத்திற்கொண்டு முழுமைத் திட்டங்கள், விரிவான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை தயாரித்து செயல்படுத்துதல், நில உபயோக நடைமுறைப்படுத்துதல், திட்டவிதிகள் மற்றும் நெறிமுறைகள் இவ்வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2023ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற தொலைநோக்கு திட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு நிறுவனமான ஹட்கோ இயக்குநர் நாகராஜ், செயல் இயக்குநர் குகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பாக உள்ளனரா?
மேலும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது குறித்தும், இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிறுவனமான ஹட்கோ மூலமாக கூடுதலாக தேவைப்படும் நிதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.