சென்னை பூவிருந்தவல்லி, சாரதி நகரைச் சேர்ந்தவர் நூர்ஜகான்(30), இதே பகுதியில் வசித்துவரும் இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றிரவு (பிப்.9) வீட்டை பூட்டிவிட்டு தந்தையை கவனித்துக் கொள்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவிலிருந்த 30 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
அடையாளம் தெரியாத நபர்கள் இந்த வீட்டில் மட்டுமில்லாமல் அருகிலுள்ள மற்ற இரண்டு வீடுகளிலும் கொள்ளை அடித்துள்ளனர். அதில் ஒரு வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் கொள்ளை முயற்சியும், மற்றொரு வீட்டில் ஒரு செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க:பெண்களிடம் வழிப்பறி கொள்ளை: துரித நடவடிக்கை எடுத்த போலீஸார்!