ETV Bharat / city

குறையாத கரோனா - உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை

சென்னை: இன்று முதல் உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கடைகளில் இந்த சேவை தொடங்கப்படவில்லை.

reopen
reopen
author img

By

Published : Jun 8, 2020, 4:39 PM IST

Updated : Jun 8, 2020, 4:44 PM IST

கரோனா தொற்று காரணமாக உணவகங்களில் பார்சல் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று முதல், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், கரோனா அச்சம் காரணமாகவும், பொது போக்குவரத்து சேவை இல்லாத காரணத்தாலும், மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதால் சென்னையில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தும் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

பல உணவகங்கள் இன்னும் திறக்கப்படாதபோது, திறக்கப்பட்ட கடைகளிலும் மிக சொற்பமான அளவே வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். எனினும் முன்பை விட வியாபாரம் சற்று அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பார்சல் வாங்கிச் செல்வதையே விரும்புவதாகவும், கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய சென்னை உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரவி, போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினாலும், அரசிடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்காததாலும், தங்களால் கடைகளை மீண்டும் இயக்க முடியவில்லை என்றார்.

சென்னையில் இன்று 20 விழுக்காடு கடைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரவி தெரிவித்தார்.

குறையாத கரோனா - உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை!

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ஹால் டிக்கெட், முகக்கவசம் வழங்கிய தலைமை ஆசிரியர்

Last Updated : Jun 8, 2020, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.