ETV Bharat / city

ஊரடங்கால் தடுமாறும் உணவகங்கள்... உதவுமா அரசு?

சென்னை: ஊரடங்கு காரணமாக உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

hotels
hotels
author img

By

Published : Jun 2, 2020, 2:52 PM IST

Updated : Jun 2, 2020, 5:17 PM IST

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காரணமாக உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டது. மேலும், பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படாததால், இத்தொழில் முற்றிலுமாக முடங்கியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம், கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை கொடுக்க முடியாத சிரமத்திற்கு உரிமையாளர்கள் ஆளாகியுள்ளனர்.

சென்னையில் மட்டும் சிறிய ரகம் முதல் நட்சத்திர விடுதிகள் வரை சுமார் 10 ஆயிரம் உணவகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 லட்சம் பேர் இத்துறையை நம்பியுள்ள நிலையில், வரும் நாட்களில் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய சென்னை உணவகங்கள் அசோசியேஷன் தலைவர் ரவி, “வேளாண் விளை பொருட்களில் 50 விழுக்காடு அளவு, உணவகங்கள் உள்ளிட்ட உணவு துறையால்தான் வாங்கப்படுகிறது. உணவகங்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளும் பாதிக்கப்படுவர். சொந்த ஊர் புறப்பட்டுச் சென்ற வட மாநிலத் தொழிலாளர்கள் திரும்ப வந்தாலும் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. அடுத்த 6 மாதங்களுக்கு வேலை வாய்ப்புகள் இருக்காது“ என்றார்.

அடுத்த ஓராண்டிற்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரியுள்ள உணவக உரிமையாளர்கள், விற்பனை வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றையும் குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தள்ளி வைக்கவும் வேண்டுகின்றனர். தொழிலில் ஏற்பட்டுள்ள இழப்பால் ஊழியர்களுக்கு தங்களால் ஊதியம் கொடுக்க முடியவில்லை என்றும், எனவே, பிஃஎப் பணத்தில் இருந்து 50 விழுக்காடு தொகையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இப்பேரிழப்பிலிருந்து மீள வங்கிகள் உடனடியாக தங்களுக்கு கடனுதவி அளித்து உதவ வேண்டுமென்றும், அதற்கு அரசு தங்களுக்கு பக்கபலமாக இருக்கவும் உணவக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊரடங்கால் தடுமாறும் உணவகங்கள்... உதவுமா அரசு?

இதையும் படிங்க: 'கடை திறந்தாலும் வியாபாரம் இல்லை'

Last Updated : Jun 2, 2020, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.