போலி சாமியார் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிப்பதாக நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து யுவவாஹினி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகாரில், நடிகர் எஸ்.வி. சேகர் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிக்கிறார் என குற்றஞ்சாட்டி உள்ளனர். அந்த புகாரில், “பிரபல சாமியார் நித்யானந்தாவை காவலர்கள் தேடி வருகின்றனர்.
![Hindu organization complains to Actor SV Shekhar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-svsekar-againstcopcomplaint-script-7202290_13122019083803_1312f_1576206483_174.jpg)
இவர் இந்து மதக் கடவுள்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். இவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் எஸ்.வி. சேகர், நித்யானந்தாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார். நித்யானந்தாவை காணவில்லை என ஊடகங்கள் மற்றும் காவல்துறையை திசை திருப்பும் வேலையை செய்துள்ளார்.
நித்யானந்தா இருக்கும் இடம் எஸ்.வி. சேகருக்கு தெரியும். ஆகவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி அதில் முதல்வர் ஆகலாம்' - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!