ETV Bharat / city

முதலமைச்சர் நிவாரண நிதி தகவல் குறித்த வழக்கு: தரவுகளை இணையத்தில் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற தொகை விவரங்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 8 வாரத்திற்குள் வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 16, 2020, 11:38 PM IST

வெள்ளம் வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய நிவாரண நிதியத்தை உருவாக்க, மத்திய மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இணையதளத்தில் நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி வழக்குரைஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப் படவில்லை. வெளிப்படைத்தன்மையை பேணும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்." என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் நிதித்துறை துணைச் செயலாளரும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமலா செல்வி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது

அதில், பொதுமக்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்துள்ளதாகவும், அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தின் வாயிலாக பணம் செலுத்தியவர்கள் விவரம் அதில் இடம் பெற்றுள்ளது.

அரசின் சேமிப்பு வங்கி கணக்கிற்கு வரைவோலை காசோலை மூலமாகவும் சிலர் இணையவழி என சொல்லப்படும் கூகுள் பே, அமேசான், போன் பே, பேடிஎம், மொபிக்விக் உள்ளிட்ட யுபிஐ பணபரிவர்த்தனை என பல்வேறு வகையில் நிதிகள் வருவதால் அதனை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் இருப்பதாகவும், எனினும் அனைத்தையும் தொகுத்து இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் முழு விவரங்கள் இடம்பெற செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல 10 லட்சம் ரூபாய்க்கும் மேலாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் முதலமைச்சர் சார்பில் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டு, தினசரி நாளிதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப் பெறும் தொகை மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதனை பிரத்யேகமாக முழுக் கவச உடை, வென்டிலேட்டர், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீரர்களுக்கு உணவு பொருள் வழங்கல், பொது சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

382.89 கோடி:

கரோனா நடவடிக்கைக்கு உதவும் பொருட்டு, கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதிவரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 382 கோடியே 89 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அரசு அலுவலகங்களில் குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிக்கு வருவதாலேயே இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட படவில்லையே தவிர, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற தொகை விவரங்கள் நிதி வழங்கியவர்கள் யார் யார் பயனாளிகள் யார் யார் என்பன உள்ளிட்ட விவரங்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 8 வாரத்திற்குள் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.