ETV Bharat / city

நீதிமன்றத்தை கருவியாக பயன்படுத்துவதா? - அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பின் சாராம்சம் - சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு
author img

By

Published : Jul 11, 2022, 12:06 PM IST

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பின் சாராம்சம்:

சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட உச்ச நீதிமன்றம் (ஜூலை.06) அனுமதி வழங்கி விட்டது. அதற்கு முரணாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பொதுக்குழு கூட்டம் சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்த வில்லை என்றால், உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட கூடாது என்ற கோரிக்கையை தவிர, வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை.

பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23 அறிவிக்கப்பட்டது.

எனவே 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவே கருத முடியும். ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். பெரும்பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார்.

நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார். பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை மனுதாரர் அனுகலாம்.

சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஓபிஎஸ் இடைக்கால நியமனத்தை ஏற்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுகுழுவிற்கு அனுமதி! - நீதிமன்றம் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.