சென்னை: வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இதேபோன்று, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் நாளை (டிசம்பர் 10) லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.
நாளை மறுநாள் (டிசம்பர் 11) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 12, 13 நிலவரம்
தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி