சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Regional Meteorological centre) இன்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி (Atmospheric overlay circulation) தமிழ்நாடு கடலோரப் பகுதி வரை நீடிக்கிறது.
தற்போது, இரண்டு நாள்களுக்கு (நவம்பர் 22, 23) கனமழை வலுகுறைந்து, அடுத்த மூன்று நாள்களில் (நவம்பர் 24, 25, 26) மீண்டும் வலுபெற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு (TN Heavy Rain) உள்ளது. இந்த வளிமண்டலச் சுழற்சி, அடுத்த ஐந்து நாள்களில் மேற்கு வடமேற்குத் திசையில் நகரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று (நவம்பர் 22) கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு