சென்னை: வணிக வளாகங்கள், கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு நடத்தினார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று, ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று, பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
பொது இடங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில், பயன்படுத்திய முகக்கவசத்தைப் போடக்கூடாது என்று கூறிய ராதாகிருஷ்ணன், துணியாலான முகக்கவசத்தை ஒவ்வொரு முறையும் பயன்பாட்டிற்குப் பிறகு நன்றாகத் துவைத்து அணியவும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கபடுமென்றும் அவர் எச்சரித்தார்.
அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல என்றாலும், நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதியாக மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு!