சென்னை: கிண்டியில் 15 வயது சிறுமி, தனது தந்தைக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தந்தை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பமாகிய நிலையில், தகவலை தாயிடம் தெரிவித்தபோது, கருவை கலைத்த தாயார் சம்பவத்தை வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி காவல் துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் குற்றவாளியான தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரிடம் விசாரணை