ETV Bharat / city

தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை: மக்கள் அதிகம் கூடும் இடமான தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Country bomb Hand made bombing at Thenampettai Hand made bomb at chennai american consulate தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு நாட்டு வெடிகுண்டு வீச்சு சென்னை அமெரிக்க தூதரகம், நாட்டு வெடிக்குண்டு வீச்சு, விசாரணை, சிசிடிவி காட்சிகள், பதற்றம்

author img

By

Published : Mar 3, 2020, 7:46 PM IST

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே உள்ள தனியார் கார் ஷோரூம் எதிரே இன்று மாலை பெரும் சத்தத்துடன் அடையாளம் தெரியாந்த பொருள் ஒன்று வெடித்தது. இந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்த தகவலின் பேரில் காவலர்கள் சம்பவப் பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் அங்குள்ள கடைகளிலிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுக்குட்படுத்தினர்.

அதில், இருவர் பொருள் ஒன்றை தூக்கி எறியும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? தூக்கி வீசப்பட்டது நாட்டு வெடிக்குண்டா? யாரையும் கொலை செய்யும் நோக்கில் இவ்வாறு நடந்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன போன்ற பல்வேறு கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் அமெரிக்க தூதரகம் ஒன்றும் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: தந்தை-மகள் இருவரை என்.ஐ.ஏவால் கைது
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.