ETV Bharat / city

ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் இருந்து குருமூர்த்தியை நீக்க வேண்டும் - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்

பொதுத்துறை வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களைப் பற்றி தேவையற்ற இழிவான கருத்துகளைப் பகிர்ந்த குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் இருந்து குருமூர்த்தியை நீக்க வேண்டும்- இந்திய  வங்கி ஊழியர் சம்மேளனம்

author img

By

Published : May 17, 2022, 10:26 PM IST

சென்னை: இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கடந்த மே 8ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஆடிட்டரும், ரிசர்வ் வங்கியின் இயக்குநரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பொதுத்துறை வங்கிகளை கேவலப்படுத்தும் வகையில் பேசியும், அதன் அலுவலர்களை ’’கழிசடைகள்’’ என்று ஆதிக்க உணர்வுடன் இகழ்ந்தும் பேசியுள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சர் முன்பு குருமூர்த்தி இவ்வாறு பேசியது பொதுத்துறை வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் இடையே மிகப் பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நாட்டு மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பை நன்கு உணர்ந்தவர்கள். கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் வங்கி ஊழியர்கள் என நிதியமைச்சர் பெருமையாக அதே மேடையில் பேசியிருந்தார்.

இப்படி இருக்க குருமூர்த்தி பேசும்போது, நிதியமைச்சர் கண்டித்து இருந்தால் நியாயமாக இருந்திருக்கும். இப்படிப்பட்ட ஒருவரை ரிசர்வ் வங்கியில் இயக்குநர்கள் குழுவில் வைத்திருப்பது கூட தேச வளர்ச்சிக்கு நல்லதல்ல, அப்பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.

மேலும் குருமூர்த்தியின் இத்தகைய பேச்சிற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மிக வன்மையாக தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. குருமூர்த்தி தனது தவறான, தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாத கூட்டுறவுச் சங்கம் - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.