ETV Bharat / city

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - பள்ளிக்கல்வி

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் நடத்துவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

classes
classes
author img

By

Published : Jul 30, 2020, 6:59 PM IST

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், ” மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது. அதன்படி,

  • மாணவர்களுக்கு கல்வியை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆன்லைன் முறையிலும், ஆஃப்லைன் முறையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமும் கற்பிக்கலாம்.
  • அரசின் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ’வீட்டுப்பிள்ளை’ என்ற திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட உள்ளது.
  • தமிழ்நாடு அரசின் ’e-learn.tnschool.gov, www.kalvitholaikatchi.com’ ஆகிய இணையதள பக்கங்களில் வீடியோ பாடங்களை மாணவர்கள் படிக்கலாம்.
  • பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் ’க்யூ ஆர் கோடு’ போடப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் கற்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ’இ பாடசாலா’ என்ற திட்டத்தில் புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • நீண்ட நேரம் இணைய வழியில் கற்பதன் மூலம், பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாணவர்களின் வயதிற்கேற்ப சரியான முறையில் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது. எனவே, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது.
  • ஒவ்வொரு பாடங்களும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு 6 வகுப்புகள் வீதம் வாரத்துக்கு 28 வகுப்புகள், ஆன்லைன் மூலம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தலாம்.
  • ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பாடவேளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் என, 2 பாடவேளைகளும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பாடவேளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் என, நான்கு பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
  • ஆன்லைன் கல்விக்காக ஆசிரியர் ஒருவரை ஆலோசகராக பள்ளிகள் நியமிக்க வேண்டும்.
  • பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணித்து, அவர்களுடன் உரையாடி, ஆன்லைன் கல்வியால் மனரீதியாக ஏதேனும் பாதிப்புக்குள்ளாகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும்.
  • மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மின்னணு சாதனங்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் நடைபெறாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு தேர்வு துறை கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.