சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, அதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தனது விசாரணையை முடித்த பின்பு, அறிக்கை தயாரிக்கும் பணிக்காக கடந்த 12 நாட்களாக ஆணையத்தில் இருந்து பணியை மேற்கொண்டார்.
மேலும், இறுதியாக ஆணையம் விசாரணை மேற்கொண்ட போது, எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர். அவர்கள் தாயாரித்த அறிக்கையும் இன்னும் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தான் 12ஆவது முறையாக ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், அறிக்கை இறுதி செய்து அரசிடம் சமர்பிக்க மேலும், 1 மாதம் கால அவகாசம் கேட்டு ஆணையம் அரசுக்கு கடிதம் எழுதியது.
இதை பரிசீலித்த அரசு, ஒரு மாதம் மற்றும் 9 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, 13ஆவது முறையாக காலநீட்டிப்பு செய்துள்ளது. இந்த காலத்திற்குள் அறிக்கையை இறுதி செய்து வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி வழங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம்; எடப்பாடி பழனிசாமியை விசாரியுங்கள் - புகழேந்தி பேட்டி