சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகிகள் சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் ஆகியோரின் பிறந்தநாள் நினைவாக நேற்று (அக்.4) ஆளுநர் மாளிகையில் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, 'சுப்பிரமணிய சிவா தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக அர்ப்பணித்தவர். காவலர்களின் தடி அடி, துப்பாக்கி சூடு இதற்கு அஞ்சாமல் இறுதி மூச்சு வரை "வந்தே மாதரம்" முழங்கி மூவர்ணக் கொடியை தன் கையோடு வைத்திருந்த இளம் சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன்.
ஆங்கிலேயர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார் இருப்பினும் அன்னை தாய்த்திருநாட்டின் தவப்புதல்வர்களாக திகழ்ந்தவர்கள். அவர்களின் ஈடு இணையற்ற பங்களிப்புகளுக்கு நம் இந்திய தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும். அவர்களின் வாழ்க்கை வரும் தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருக்கும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உடனிருந்தார்.
இதையும் படிங்க: ’ஈரோட்டில் பிறந்த ஓர் வள்ளுவர் தான் பெரியார்...!’ - தொல். திருமாவளவன்