சென்னையில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில், தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படையினர் சேர்ந்து கடற்படை இசைக்குழு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இசைக்குழு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், "தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை தின இசைக்குழு நிகழ்ச்சியில், பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் இசை பிரபஞ்சத்திற்கு ஆன்மாவைத் தருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ஆளுநருடன் வெங்கையா நாயுடு சந்திப்பு!