ETV Bharat / city

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டென்னிஸ் விளையாடவேண்டும் என நினைத்தால் இலவசப்பயிற்சி.. விஜய் அமிர்தராஜ் - செஸ் ஒலிம்பியாட் போட்டி

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டென்னிஸ் விளையாட வேண்டும் என நினைத்தால் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டென்னிஸ் விளையாட வேண்டும் என நினைத்தால் இலவசமாக பயிற்சி
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டென்னிஸ் விளையாடவேண்டும் என நினைத்தால் இலவசப்பயிற்சி.. விஜய் அமிர்தராஜ்
author img

By

Published : Aug 23, 2022, 10:31 PM IST

சென்னை ஓபன் 2022 உலக மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அறிமுக நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னை எம்.ஆர்.சி.நகர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், துறைச்செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் விஜய் அமிர்தாஜ், '5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஓபன் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டு நிகழ்வுகளுக்கு சிறந்த ஒத்துழைப்பை நல்கி வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சென்னை ஓபன் போட்டிகள் உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக பார்க்கப்படும்.

இந்தியாவில் சென்னை ஓபன் போட்டிகளை சோனி நிறுவனம் நேரலையாக வழங்குகிறது. சானியா மிர்சா US ஓபன் போட்டியில், காயம் காரணமாக பங்கேற்க இயலவில்லை. இந்த வருடம் ஓய்வு அறிவித்துள்ளார்.

எங்கள் சங்கத்தினரிடம் கலந்தாலோசித்து, நாங்கள் சானியா மிர்சாவை, சென்னைக்கு அழைத்து, இங்கே அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டென்னிஸ் விளையாட வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் இலவசமாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், 'இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக சென்னையைக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்கள். ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்தபடியாக, சென்னை ஓபன் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான மைதானத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

3 கோடி ரூபாயில் மின் விளக்குகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று காலங்களில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் உள்ள 6 ஆடுகளங்களும் சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்கு முன்பாக ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

10-11ஆம் தேதி இந்திய வீராங்கனைகள் தேர்வு நடைபெறவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வீராங்கனைகள் இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தமிழ்நாட்டின் சென்னையை எடுத்துச்செல்லும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்கள். ஒலிம்பியாட் போட்டிகளைப் போலவே, வர இருக்கிற வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு விருந்தோம்பல் குறித்து கவனம் செலுத்தப்படும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைப் போலவே, அரசுப் பள்ளி மாணவர்களிடையே டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்கள் அனைவரையும் அழைத்து வந்து, சர்வதேச சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை காணும் வாய்ப்பு ஏற்பாடு செய்து தரும் முயற்சியில் உள்ளோம்’ என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.