தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
![அரசாணை வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11371862_thum.jpg)
மொத்தம் 6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
கரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக இரண்டு முறை தலா ஆயிரம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு வழங்கியது.
![தலைமைச் செயலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-tnorder-7209106_12042021111112_1204f_1618206072_359.jpeg)
இதையடுத்து புதியதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நிதி உதவி வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.