ETV Bharat / city

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.266 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Nov 19, 2019, 3:18 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நபார்டு வங்கியின், “நாப் கிசான்” நிறுவன உதவியுடன் செயல்படுத்த 266. 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Government of Tamil Nadu allocates Rs.266 CR for Agricultural Loans.!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் தொடங்க மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவி வழங்கும் திட்டங்கள் நபார்டு வங்கியின் “நாப்கிசான்” நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த ரூ.266 கோடி வரை செலவிடப்படும்” என முதலமைச்சர் சட்டபேரவையில் அறிவித்தார்.

இதற்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: இடைநிலை மூலதன உதவி என்னும் திட்டத்தின் மூலம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த தொகையை ஐந்தாண்டுகள் முடிந்த பிறகு 4 சதவீத வட்டி விகிதத்துடன் திருப்பி செலுத்தவேண்டும். இதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும். இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சலுகையுடன் கூடிய சூழல் நிதி வழங்கவும் வட்டி விகிதத்தை குறைக்கவும் மாநில அரசு ரூ.166. 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்தி, வணிக ரீதியதாக வளரும் வகையில் இந்த திட்டத்தினை நான்காண்டுகளில் செயல்படுத்த ரூ. 266.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, 10 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆபத்தான கடன்களைப் பெறும் கடனாளிகள் அதிகரிப்பு

Intro:Body:தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நபார்டு வங்கியின் நாப்கிசான் நிறுவன உதவியுடன் செயல்படுத்த 266. 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து
தொழில் துவங்க மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவி வழங்கும்
திட்டங்கள் நபார்டு வங்கியின் “நாப்கிசான்” நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த ரூ.266 கோடி வரை செலவிடப்படும்” என முதல்வர் சட்டசபையில் அறிவித்தார்.

இதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

இடைநிலை மூலதன உதவி என்னும் திட்டத்தின் மூலம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த தொகையை ஐந்தாண்டு முடிந்த பிறகு 4 சதவீத வட்டி விகிதத்துடன் திருப்பி செலுத்த வேண்டும். இதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை
கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும். இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.50 கோடி நிதிய மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சலுகையுடன் கூடிய சூழல் நிதி வழங்கவும் வட்டி விகிதத்தை குறைக்கவும் தமிழக அரசு 166. 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்தி, வணிக ரீதியதாக வளரும் வகையில் இந்த திட்டத்தினை 4 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ. 266.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, 10 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.