ETV Bharat / city

அறநிலையத்துறையில் வேலை: ரூ.75ஆயிரம் சம்பளம்... விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம்! - Tamil Nadu Civil Service Selection Board

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 7பி (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை-3ல் 42 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்விற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் 75 ஆயிரத்தில் வேலை

author img

By

Published : May 20, 2022, 4:50 PM IST

Updated : May 20, 2022, 5:36 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 7பி (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - 3ல் 42 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்விற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் : ரூ . 20,600 – 75,900 வரை வழங்கப்படும். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்கள் ஜூன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி காலை, மாலையில் நடைபெறும். எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல் தயாரிக்கப்படும் காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின்படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

கல்வித் தகுதி: 10, 12 அல்லது இணைக்கல்வித்தகுதி மற்றும் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்திடம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை. 1.7.2022 அன்றுள்ளபடி, 25 வயது நிறைவடைந்தவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து விளக்கம் தேவைப்படுபவர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் மாலை 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம்.

ஒருமுறை பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்; இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

இதையும் படிங்க: வரும் மே 30ஆம் தேதி மாமன்றக்கூட்டம் - சென்னை மேயர் பிரியா அறிவிப்பு!

Last Updated : May 20, 2022, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.