இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ தேர்விற்குரிய செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் நடத்திக்கொள்ளலாம். 2020ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் நடத்த வேண்டிய முதல் பருவ தேர்வினை 2021ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் தேர்வின்போது நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “ இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர் பருவ செய்முறை தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். செய்முறை தேர்வு நடைபெறுவதை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். செய்முறை வகுப்புகள் 3 மணி நேரம் நடைபெறும். கல்லூரி முதல்வர்கள் கட்டாயமாக ஆன்லைன் செய்முறைத் தேர்வுக்கு உரிய வெப் லிங்க் தொடங்க வேண்டும். மாணவர்களுக்கான செய்முறை தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நிவர் புயல் சேத விவரங்கள் வெளியீடு