ETV Bharat / city

அரசு மருத்துவர்கள் நாளை முதல் போராட்டம்!

சென்னை: வேலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நாளைமுதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Government doctor protest in TN
author img

By

Published : Oct 23, 2019, 9:29 PM IST

சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டமும் ,தர்ணா போராட்டமும் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக எங்களின் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் சம்பளத்திற்காக கடந்த ஒன்றரை வருடமாக போராடி வருகிறோம். எங்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு கடந்த ஒரு மாதமாக மண்டல வாரியாக தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறோம்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு 4,9,13 வருடங்களில் பதவி உயர்வு கிடைக்கிறது. மத்திய அரசு மருத்துவர்களை விட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சிறப்பாக பணிபுரிந்தும் எந்தவித பதவி உயர்வும் கிடைக்கவில்லை. அதனால் நோயாளிகளை பாதிக்காத வண்ணம் நாளை போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 30,31ஆம் தேதிகளிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். என்று கூறினார்.

Intro:அரசு மருத்துவர்கள் நாளை முதல் போராட்டம்

Body:அரசு மருத்துவர்கள் நாளை முதல் போராட்டம்
சென்னை,
தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்களும் நாளைமுதல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டமும் ,தர்ணா போராட்டமும் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக எங்களின் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் சம்பளத்திற்காக கடந்த ஒன்றரை வருடமாக போராடி வருகிறோம். எங்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு கடந்த ஒரு மாதமாக மண்டல வாரியாக தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறோம்.

மத்திய அரசு டாக்டர்களுக்க 4,9,13 வருடங்களில் பதவி உயர்வு கிடைக்கிறது. மத்திய அரசு மருத்துவர்களை விட தமிழக அரசு மருத்துவர்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர் என அரசு ஒப்புக் கொள்கிறது. ஆனால் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளத்தை கொடுப்பதில்லை. மத்திய அரசு மருத்துவர்கள் அங்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.
ஆனால் மாநில அரசு மருத்துவர்கள் புற நோயாளிகளாக உள்ளவர்களுக்கும் பொதுமக்களுடன் பழகி சிகிச்சை அளித்து வருகிறோம்.
மேலும் தொற்று நோய்களை தடுப்பதற்கான பணிகளையும், மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நோயாளி களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம்.
நாங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, அரசின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு செல்வது போன்ற பணிகளை தவிர்ப்போம். அப்போதும் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 30,31 ந் தேதி எங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். அப்போதும் டெங்கு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவசர சிகிச்சை உள்ளிட்டவற்றை தொடர்ந்து அளிப்போம்.
எங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் எந்தவித நோயாளிகளும் பாதிக்காத வகையில் சிகிச்சை அளிப்போம். எங்களின் ஒரே கோரிக்கையான காலமுறை பதவி உயர்வு மற்றும் மத்திய அரசு டாக்டர் களுக்கு இணையான சம்பள உயர்வினை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.