சென்னை: கே.கே நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பள்ளியின் மாணவிகள், அப்பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தது.
மேலும், ராஜகோபாலன் மீது போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் அசோக் நகர் அனைத்து மகளிர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கடந்த மே 24ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புகார் எண்ணில் குவிந்த புகார்கள்
ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளிப்பதற்காக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி சிறப்பு செல்போன் எண்ணை வழங்கினார். அதில் ராஜகோபாலன் மீது ஐந்து மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், ராஜகோபாலனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து காவலர்கள் விசாரித்து சிறையில் அடைத்தனர்.
பாயும் குண்டர் சட்டம்
இந்நிலையில், அதிகப்படியான பாலியல் புகார்கள் ராஜகோபாலன் மீது வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம்: யார் மேல் தவறு - வெளியானது புதிய வீடியோ