சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(பிப.3) காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமான பயணிகளிடம் சுங்க அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பயணியின் கீபோர்ட் இசைக்கருவிக்குள் தங்க ராடுகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தங்க ராடுகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், பயணியை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்ட பயணி சென்னையை சேர்ந்தவர் என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட 110 கிராம் தங்க ராடுகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக ஜன.26 குடியரசு தினத்தில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்!