சென்னை பாரிமுனைப் பகுதியில் காவல் துறையினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலை விதிகளை மதிக்காமல் சென்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, அவர் ராயபுரத்தைச் சேர்ந்த முருகேசன்(52) என்பது தெரியவந்தது.
மேலும் அப்பகுதியிலுள்ள அபுபக்கர் என்பவரிடம் முருகேசன் குருவியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 60 கிராம் தங்க பிஸ்கட், தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த வடக்கு கடற்கரை காவல் துறையினர், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அபுபக்கரையும் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்மழையால் இடிந்து விழுந்த மேற்கூரை, நல்வாய்ப்பாக மூவர் உயிர் தப்பினர்