சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்ற நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒரு சவரன் தங்கத்தில் விலை 35 ஆயிரத்து 880க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் ரூ.632 அதிகமாகியுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஜூலை 3) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,485க்கு விற்பனையாகிறது.சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 880க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,900க்கும் விற்பனையாகிறது.