ஹைதராபாத் : தங்கம், வெள்ளியின் விலை கடந்த சில தினங்களாக சரிந்துவருகிறது. சென்னையை பொருத்தமட்டில் கடந்த 5 நாள்களாக தங்கத்தின் விலை சரிந்துவருகிறது.
அந்த வகையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,799 ஆக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தினை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.4,440 என ஒரு பவுன் (8 கிராம்) ரூ.35 ஆயிரத்து 520 ஆக விற்பனையாகிறது. இந்நிலையில், சென்னையில் ஜூன் 19ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை 24 கார்ட் தங்கத்தின் விலை குறித்து பார்க்கலாம்.
ஜூன் தேதி | 24 காரட் ஒரு கிராம் விலை | 8 கிராம் |
28 | 4799.00 | 38392.00 |
27 | 4804.00 | 38432.00 |
26 | 4804.00 | 38432.00 |
25 | 4809.00 | 38472.00 |
24 | 4809.00 | 38472.00 |
23 | 4814.00 | 38512.00 |
22 | 4799.00 | 38392.00 |
21 | 4809.00 | 38472.00 |
20 | 4789.00 | 38312.00 |
19 | 4789.00 | 38312.00 |
இதேபோல், ஆபரணத் தங்கமான 22 காரட் பொருத்தவரை சென்னையில் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.4,440 ஆக விற்பனையாகிறது. அந்த வகையில் கடந்த 10 தினங்களில் ஆபரணத் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
ஜூன் தேதி | 22 காரட் ஒரு கிராம் விலை | 8 கிராம் |
28 | 4440.00 | 35520.00 |
27 | 4445.00 | 35560.00 |
26 | 4445.00 | 35560.00 |
25 | 4450.00 | 35600.00 |
24 | 4450.00 | 35600.00 |
23 | 4455.00 | 35640.00 |
22 | 4440.00 | 35520.00 |
21 | 4450.00 | 35600.00 |
20 | 4430.00 | 35440.00 |
19 | 4430.00 | 35440.00 |
வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.73.50 காசுகளுக்கு விற்பனையானது. இது நேற்றைய விற்பனை விலையை விட 10 காசுகள் அதிகமாகும். கடந்த 10 தினங்களில் வெள்ளி விலையை பார்க்கலாம்.
ஜூன் தேதி | ஒரு கிராம் விலை | ஒரு கிலோ |
28 | 73.50 | 73500.00 |
27 | 73.40 | 73400.00 |
26 | 73.40 | 73400.00 |
25 | 73.80 | 73800.00 |
24 | 73.30 | 73300.00 |
23 | 73.20 | 73200.00 |
22 | 73.00 | 73000.00 |
21 | 73.40 | 73400.00 |
20 | 73.10 | 73100.00 |
19 | 73.10 | 73100.00 |
பங்கு வர்த்தக வாரத்தின் முதல் நாளான (திங்கள்கிழமை) இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்ததற்கு பல்வேறு பணவீக்கம், சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளையும் பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.
பொதுவாக தங்கத்தின் விலை மாநிலத்துக்கு மாநிலம் சிறிது வித்தியாசம் காணப்படும். ஏனெனில் தங்கத்தின் விலை, “மாநில வரி, உள்ளூர் வரி, போக்குவரத்து வரி” ஆகியவற்றை கணக்கீட்டு நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்துவரும் மாதங்களில் தமிழ்நாட்டில் தங்க விற்பனை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தடைகளை தாண்டி வருகிறான் ககன்யான்?