சென்னை: துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், 1.1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த 4 பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இதோபேல சாா்ஜாவிலிருந்து பயணியிடமிருந்து, 275 கிராம் தங்கம், ரூ.9.8 லட்சம் மதிப்புடைய மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில், இரண்டு விமானங்களில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உள்ளாடையில் வைத்து 2 கிலோ தங்க பசை கடத்தல்: இருவர் கைது