இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநிலத் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அதில் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - Combined Graduate Level) மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS PO) நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehx990GXxx_6h_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform என்ற இணையதள லிங்க் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு இணையத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்!