சென்னை: போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியைச்சேர்ந்தவர் முரளி, மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இந்நிலையில் நேற்றிரவு(ஜூலை.16) அய்யப்பன்தாங்கலில் பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அய்யப்பன்தாங்கல் - பரணிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள தெருவில் இருந்து பெண் ஒருவர் காரினை வேகமாக ஓட்டி வந்ததில், மோட்டார் சைக்கிள் மீது மோதி நிலை தடுமாறி அருகில் இருந்த வீட்டின் சுவரின் மீது கார் மோதி நின்றது.
இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு விபத்துக்கு காரணமாக இருந்த காரை ஓட்டி வந்த குயின் விக்டோரியா என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: வார்டன், சக மாணவன் மீது போக்சோ