தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவரது உடல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் ராமமூர்த்தி 1981ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டுவரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அதையடுத்து இந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அக்கட்சியில் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்தார். அதையடுத்து, இன்று அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கலைஞர் நூலகம் அமைக்கும் இடத்தை மாற்ற வேண்டும் - ராஜன் செல்லப்பா