சென்னை: நடிகர் திலகத்தின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறிலுள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு ஜெயக்குமார், மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து, பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து, அவருடைய புகழுக்குப் புகழ் சேர்த்தது ஜெயலலிதாவின் அரசுதான். தற்போது, பேருந்து நிலையங்களில் அரசு விளம்பரப் படங்களை வைப்பதுதான் திமுகவின் சாதனை” என்றார்.
திமுக ஒரு துரோகக் கும்பல்
தொடர்ந்து துரைமுருகன் பேச்சுக்கு கருத்து தெரிவித்த ஜெயக்குமார், “எம்ஜிஆரைச் சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது. கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது எம்ஜிஆர்தான். எம்ஜிஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. திமுக கட்சியே ஒரு துரோகக் கும்பல்” என்றார்.
இதையும் படிங்க: பிடிஆரை கடுப்பேற்றிய பாதுகாப்பு அலுவலர்: காரணம் இதுதானா!