ETV Bharat / city

"மின்கட்டண உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்"- ஜெயக்குமார்

author img

By

Published : Jul 19, 2022, 3:52 PM IST

Updated : Jul 19, 2022, 5:34 PM IST

தேர்தல் நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின் கட்டணம் உயர்த்துவதற்கான அறிவிப்பு கண்டனத்திற்குரியது

சென்னை: காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று(ஜூலை.19) அவர் ஆஜரானார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் கைது செய்யப்பட்டபோது உடைமாற்றக்கூட அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும்,. மருந்து, மாத்திரைகள் எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு இடையில் அடைக்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கே பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றதாகவும், எனவே இதுதொடர்பாக 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்கட்டண உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்

" எதிர்கட்சி துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும். ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் கடிதம் தரலாம். ஆனால் அதிகாரமும் அங்கீகாரம் யாரிடம் உள்ளதோ அவர்கள் சொல்லுவதை தான் சபாநாயகர் கேட்க வேண்டும்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், இல்லை என்றால் உங்களுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தெரிவித்தது. அதற்காக நாங்கள் பயப்படவில்லை. கட்டணத்தை உயர்த்தவில்லை. மாறாக நாங்கள் சலுகையை அறிவித்தோம். ஆனால் தேர்தல் நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் உயர்வால் பொதுமக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பொருளாதார வல்லுனர்கள் குழு அமைத்துள்ளோம் என தெரிவித்தார்கள். அந்து குழு அமைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அவர்கள் மக்கள் வாழ்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்?. அரசு கஜானாவை நிரப்ப அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள் ? நிர்வாகம் செய்ய தெரியாமல் மின் கட்டணத்தை உயர்த்தி கொண்டு மத்திய அரசு மேல் பழி சுமத்தி வருகின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு வரலாற்றில் இந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை - பா.ம.க. நிறுவனர் இராமதாசு

Last Updated : Jul 19, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.