நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ’வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.
இதனிடையே, சிறுசேரி நிலத்திற்காக அன்புவேல்ராஜனும், ரமேஷ் குடவாலாவும், தன்னிடம் இருந்து 2.70 கோடி ரூபாயை கூடுதலாக பெற்று மோசடி செய்துவிட்டதாக காவல் நிலைத்தில் நடிகர் சூரி புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், காவல் துறை தன்னை கைதுசெய்யக்கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன் பிணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: சிம்பு பிரச்சனையை கடவுள் பார்த்துக்கொள்வார் - டி.ராஜேந்தர்