ETV Bharat / city

கனமழை எச்சரிக்கை: மக்களுக்குத் தேவையான உணவு தயார் - கே.என். நேரு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்
author img

By

Published : Nov 10, 2021, 9:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர் மழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று (நவ.10) நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை(சுகாதாரம்) அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.என். நேரு, 'சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அலுவலர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 சிறப்பு ஐஏஎஸ் அலுவலர்கள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாளை(நவம்பர் 11) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை முழுவதும் மின் மோட்டார்கள், டீசல் மோட்டார்கள் என 400 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப மோட்டார்கள் தயார் நிலையில் வைப்பதற்காக இன்று (நவ.10) இரவே முடுக்கிவிடப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்களுக்கு, மக்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டம் வாரியாக தேவையான தற்காலிகப் பணியாளர்களை இன்று இரவே நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான தேவைப்படும் தொகையை உடனே வழங்குவதற்காக மாநகராட்சி ஆணையரிடமும், சிறப்பு ஆட்சியர்களிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரொட்டி, பால், பழங்கள் போன்ற உணவுகள் தயார் நிலையில் வைப்பது, தாழ்வானப் பகுதிகளிலுள்ள மக்களை முகாம்களில் தங்க வைப்பது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்று இரவே மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்' எனத் தெரிவித்தார்.

களத்தில் இறங்கிய முதலமைச்சர்

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'வட சென்னையைப் பொறுத்தவரையில் மழை தொடங்கியதிலிருந்தே மூன்று நாள்கள் முதலமைச்சர் ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்.

ஊடகங்களில் வடசென்னையில் அதிகளவு மழை நீர் தேங்கியிருப்பதுபோல் பிரமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நின்ற பின்பும் தேங்கியிருக்கும் கொளத்தூர் தொகுதியில் தற்போது அனைத்து இடங்களும் சீர்செய்யப்பட்டுள்ளன. ஊடக நண்பர்கள் வாருங்கள். நேரடி ஆய்வு செய்யுங்கள்' என்றார்.

120 கோடி ரூபாயில் மருந்துகள் தயார்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், 'சென்னையில் 200 வார்டுகள் உள்ளன; வார்டுக்கு 10 பேர் வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்களை உடனே நியமிக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு 570 பேர் வெள்ளத்தில் இறந்தனர். ஆனால், தற்போது உயிர் சேதமோ பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் கிடையாது.

மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களான காய்ச்சல், சளி, சேற்றுப் புண் போன்ற வியாதிகளுக்கு முறையான மருந்து வசதிகளோடு 200 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முழுவதும் 400 அவசர ஊர்திகள், 750 ஜீப்புகள் என மொத்தமாக ஆயிரத்து 150 நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்

மழைக்கால நோய்களுக்கான 120 கோடி ரூபாயில் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. 15 மண்டலங்களிலும் மக்களுக்குத் தேவையான உணவுகள் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக மழைக்கால நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர்கள் மூன்று பேரும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: பேட்டிக்கு இடையே தயாநிதி மாறனை கலாய்த்த கே.என். நேரு; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எனவும் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.