ETV Bharat / city

அமைச்சர்கள் தொகுதிக்கு செய்வது சட்ட விரோதமாகாது! - உயர் நீதிமன்றம் - குமாரபாளையம்

சென்னை: அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்கு வசதிகள் செய்து கொடுப்பதை சட்ட விரோதமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

high court
high court
author img

By

Published : Mar 12, 2021, 3:52 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும், 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டி, அனிமூர் ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, பணிகளுக்கான டெண்டர் விவரங்களை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இந்த ஆவணங்களை மேற்கோள் காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சில பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்ட தேதியிலேயே பணிகள் ஒதுக்கி அவசரமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 95 சதவீத நிதியை அமைச்சரின் தொகுதிக்கு மட்டும் ஒதுக்கி விட்டால் மீதமுள்ள தொகுதி மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா எனவும் வினவினார்.

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நிதியாண்டு முடியும் முன், நிதியை பயன்படுத்தாவிட்டால், அவை காலாவதியாகி விடும் எனவும், மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டே பணிகள் ஒதுக்கப்பட்டதாகவும், கூறினார்.

இருப்பினும், பணிகளுக்கு டெண்டர் கோரியதில் அவசரம் காட்டியது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அதை முடிவாக கருத முடியாது எனக் கூறிய நீதிபதிகள், அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்கு வசதிகள் செய்து கொடுப்பதை சட்ட விரோதம் எனக்கூற முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் நேரத்தில் உயர் நீதிமன்றம் ஏதேனும் கருத்துகளை கூறினால், அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிபதிகள், உடனடி உத்தரவு எதையும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட கமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.