ETV Bharat / city

மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Financial
Financial
author img

By

Published : Jul 8, 2022, 4:15 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே இன்று (8.7.2022) காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து, கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குன்றத்தூரில் ரூ.26 கோடி மதிப்பான அரசு நிலம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.