ETV Bharat / city

முருகப்பா குழுமத்தில் முருகப்பனின் மகள் சேர்க்கப்படவில்லை எனப் புகார் - வள்ளி அருணாச்சலம்

சென்னை: முருகப்பா குழுமத்தின் தாய் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக வாரிய குழுவில் எம்.வி. முருகப்பனின் மகள் வள்ளி அருணாச்சலம் சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

family-feud-in-murugappa-group
முருகப்ப குழுவில் வள்ளி அருணாச்சலத்திற்கு இடம் வழங்கப்படவில்லை?
author img

By

Published : Jan 7, 2020, 7:40 PM IST

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முருகப்பா குழுமத்துக்கு சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ், சோழ மண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சுரன்ஸ், கார்போரன்டிம் யுனிவர்சல், இஐடி பாரி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. பாரிமுனையில் இஐடி பாரி சர்க்கரை தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் நகரின் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.

family-feud-in-murugappa-group
முருகப்பா குழுமம்

முருகப்பா நிறுவனத்தின் 36 ஆயிரத்து 893 கோடி ரூபாய் மதிப்புடைய மூத்த உறுப்பினரான எம்.வி. முருகப்பன் 2017இல் உயிரிழந்தார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான (ஹோல்டிங் கம்பெனி) அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் அவருக்குச் சொந்தமான 8.15 விழுக்காடு பங்குகள் அவரது மனைவி, இரண்டு மகள்களுக்கு வந்தது. இந்த நிலையில், முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக வாரிய குழுவில் எம்.வி. முருகப்பனின் மகள் வள்ளி அருணாச்சலம் சேர்க்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய வள்ளி அருணாச்சலம், "முருகப்பா குழும நிறுவனங்களில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எங்களுக்கு, எங்கள் பிரிவு நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக வாரியக் குழுவில் இடம் வழங்கப்படவில்லை. நான் பெண் என்பதால்தான் வாரியக் குழுவில் பொறுப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. குடும்ப நிறுவனத்தில் இருக்கும் எங்களது பங்குகளை, எனது தந்தையின் வாக்குப்படி நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முன் வந்தும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிர்வாக வாரியத்தில் இடம் பெற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போராடி வருகிறேன். இருப்பினும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உரிய பதில் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்தகட்டமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகப்பா நிறுவனத்தில் பிரச்னை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அக்குழுமத்தின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

இதையும் படியுங்க: ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயா

Intro:Body:40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய முருகப்பா நிறுவனத்தில் பிரச்னை

சென்னை -

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட முருகாப்பா குழுமத்துக்கு சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ், சோழ மண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சுரன்ஸ், கார்போரன்டிம் யுனிவர்சல், இஐடி பாரி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இஐடி பாரி சக்கரை தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம்தான் சென்னை நகரின் பிரலமான அடையாங்களின் ஒன்றான பாரிமுனை. 36,893 கோடி ரூபாய் மதிப்புடைய முருகப்பா நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான எம்.வி.முருகப்பன் கடந்த 2017 -இல் உயிரிழந்தார். இதனையடுத்து, முருகப்பா நிறுவனத்தின் தாய் நிறுவனமான (ஹோல்டிங் கம்பெனி) அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் அவருக்குச் சொந்தமான 8.15 சதவிகிதப் பங்குகள் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு வந்தது. இந்த நிலையில், முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக வாரிய குழுவில் எம்.வி.முருகப்பனின் மகள் வள்ளி அருணாச்சலம் சேர்க்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய வள்ளி அருணாச்சலம், "முருகப்பா குழும நிறுவனங்களில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எங்களுக்கு, எங்கள் பிரிவு நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக வாரிய குழுவில் இடம் வழங்கப்படவில்லை. நான் பெண் என்பதால்தான் வாரிய குழுவில் பொறுப்பு வழங்கப்படவில்லை. குடும்ப நிறுவனத்தில் இருக்கும் எங்களது பங்குகளை, எனது தந்தையின் வாக்குப்படி நியாமான விலைக்கு விற்பனை செய்ய முன் வந்தும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் நிர்வாக வாரியத்தில் இடம் பெற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போராடி வருகிறேன், இருப்பினும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உரிய பதில் வரவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் அடுத்தகட்டமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் 120 ஆண்டுகள் பழமைவாய்ந்த முருகப்பா நிறுவனத்தில் பிரச்னை எழுந்துள்ளது ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முருகப்பா குழுமத்தின் மற்ற குடும்ப உறுப்பினர் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.