சென்னை: 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கூடுதல் பரிசு வழங்க 3 கோடியே, 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், 2015 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றவர் பிளாட்டினி மாறன், பதக்கம் வென்ற பிளாட்டினி மாறனுக்கு 70 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு கூடுதல் பரிசு வழங்க வேண்டும் என அவரின் தாயார் சந்தான லட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிளாட்டினி மாறன் மாற்றுத்திறனாளி வீரர் என்பதால் கூடுதல் பரிசு வழங்குவது குறித்து ஆய்வு செய்து நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு மாற்றப்பட்ட விதிகளின்படி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற 28 வீரர்களுக்கு கூடுதல் பரிசு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பதக்கம் வென்ற வீரர்களுக்கு கூடுதல் பரிசு வழங்க 3 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிகார மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் - வெளியான சிசிடிவி காட்சி