சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1, முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களைச் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தொடர் மழையின் காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்களுக்குச் சிரமங்கள் உள்ளது. எனவே, இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நவ. 14ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் நீர் தேங்குதல் ஓரளவு குறைந்திருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்