சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையோ பணி நியமனமோ நடைபெறக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு பாமக முன்னாள் எம்எல்ஏ காவேரி வையாபுரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி, வழக்கை மேலும் தொடர்ந்தால் 1 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து காவேரி வையாபுரி மனுவை திரும்பப்பெற்றார்.
இதையும் படிங்க: தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்